அரசியல்வாதிகளே தைரியம் இருந்தால் உங்கள் சொத்து பட்டியலை வெளியிடுங்கள், என்னுடைய சொத்து பட்டியலை வெளியிட தயாராக இருக்கிறேன் என்று வீரப்பனின் மகள் வித்யா சவால் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் சீமான் முன்னிலையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில், என் தந்தையை வைத்து அரசியல் செய்த எத்தனையோ பேர் என்னை குற்ற பின்னணி கொண்டவரின் மகள் என்கின்றனர். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அரசு ஆகாது, அது திருட்டு கும்பல் என்று ஆவேசமாக பேசினார்.