தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை என்று சீமான் விமர்சித்துள்ளார். சிபிஐ இருக்கும்போது NIA அமைப்பு விசாரணையில் இறங்குகிறது. ஐடி அமைப்பு இருந்தும் ED வழக்குகளை கையாள்கிறது.

ஏன் இரண்டுக்கும் மத்திய அரசு செலவு செய்கிறது என கேள்வி எழுப்பிய அவர், முதலில் ஒரு ரவுடியை ஏவி விடுவது, அவன் அடிவாங்கி விட்டு வந்த பிறகு மற்றொரு பெரிய ரவுடி அனுப்பும் வேலையை பாஜக செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.