நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரம் காட்டவில்லை என்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது சகோதரரும், ரசிகர் மன்றத்தின் முக்கிய உறுப்பினருமான சத்தியநாராயண ராவ் அதிரடி பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கரும்பிள்ளை மடம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஜினிக்கு கவர்னர் பதவிக்கான வாய்ப்பு வந்தது. ஆனால் அவர், அதை வேண்டாம் என்று கூறிவிட்டார். எம்பி, எம்எல்ஏ போன்ற பதவிகளில் அவர் ஆர்வம் கொள்வது இல்ல” என தெளிவாக தெரிவித்தார்.
அத்துடன், நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்த சத்தியநாராயண ராவ், “விஜயின் அரசியல் வருகை என்பது கடினமான ஒன்று. ஆனால், அண்ணாமலை அரசியலில் தொடர்ந்து முன்னேறும் சக்தி வாய்ந்த தலைவர்” என தெரிவித்தார். இந்த கூற்றுகள், தற்போதைய அரசியல் சூழலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதில் அவரது ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், இந்த புதிய தகவல் அவற்றை ஓரளவுக்கு குறைக்கும் வகையிலேயே உள்ளது. தனிப்பட்ட வாழ்வில் தியானமும் ஆன்மீகத்தையும் முன்னிலைப்படுத்தும் ரஜினிகாந்த், அரசியலிலோ அல்லது அதிகார பதவிகளிலோ ஈடுபட விருப்பம் இல்லையென அவரது சகோதரரின் கூற்று மேலும் உறுதி செய்கிறது.
