கம்போடியாவின் ப்னாம் பென் நகரில் அக்டோபர் 23 அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஒரு சிறுவனுக்கு காது வலி மற்றும் தொடர்ந்து ஒலி கேட்பதாகப் புகார் கூறியதும், அவன் அம்மா உடனே கிளினிக்குக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர் முதலில் சாதாரண காது தொற்று என்று நினைத்தார்.
ஆனால் காதுக்குள் ஆழமாக ஒரு உயிருள்ள கரப்பான் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து மருத்துவர் அதிர்ந்து போனார். பூச்சி உயிருடன் அசைந்து கொண்டிருந்ததால், அதை எடுப்பது மிகக் கடினமாக இருந்தது. வீடியோவில் மருத்துவர் சக்ஷன் கருவி உபயோகித்து கவனமாக பூச்சியை ஒரே துண்டாக எடுத்தார்.
சிகிச்சைக்குப் பிறகு, வீட்டில் சுத்தத்தைப் பேணவும், குழந்தையின் காதை அடிக்கடி சரிபார்க்கவும் மருத்துவர் அறிவுறுத்தினார். உயிருள்ள பூச்சி எடுக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரும் அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்தனர்.
