ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது சுவாரசியமான நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. போட்டியின் போது எல்லைக்கோட்டிற்கு அருகே நின்றிருந்த ஒரு சிறுவன், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயரை கண்டதும் ஓடிசென்று அவரது பாதங்களைத் தொட்டு வணங்க முயன்றான்.
மேலும் சிறுவனின் இந்த எதிர்பாராத செயலால் ஒரு நிமிடம் திகைத்துப் போன வெங்கடேஷ் ஐயர், உடனடியாக அந்த சிறுவனைத் தடுத்து நிறுத்தி அன்பு கலந்த புன்னகையுடன் அவனிடம் உரையாடினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
This moment was pure gold yesterday 😂😭
Some kid touched Venkatesh Iyer’s feet, and Iyer’s reaction was epic 🤣 pic.twitter.com/hW1kVyIxgV
— OldMonkOfCricket (@BhushanManmath) April 13, 2026
“>
இதனால் பொதுவாக மைதானத்தில் வீரர்கள் மீது ரசிகர்கள் காட்டும் அதீத அன்பு பல நேரங்களில் கவனத்தைப் பெறும், அந்த வகையில் வெங்கடேஷ் ஐயர் காட்டிய நிதானமும் அந்த சிறுவனிடம் அவர் நடந்து கொண்ட கனிவான முறையும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விளையாட்டையும் தாண்டி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான இத்தகைய உணர்ச்சிகரமான தருணங்கள் இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
