மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் திருமணத்தை மீறிய கள்ளத்தொடர்புக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை, மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தன் அசிங்கமான ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருந்த கணவனை எப்படியாவது வழியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டிய அந்த பெண், காதலனுடன் இணைந்து இந்த பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளார். மனிதநேயமற்ற முறையில் அரங்கேற்றப்பட்ட இந்த கொடூரக் கொலைச் சம்பவம், அப்பகுதி மக்களைக் உரைய வைத்துள்ளது.

கொலை செய்த பிறகு, குற்றத்தை மூடிமறைக்கவும் தங்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும் கொடூர தம்பதி மிக விபரீதமான திட்டத்தைத் தீட்டினர். கணவனின் உயிரற்ற உடலைத் தங்களது வீட்டிலேயே சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருந்துள்ளனர்.

உடலை என்ன செய்வது என்று திட்டம் தீட்டிய பிறகு, நள்ளிரவு நேரம் பார்த்து யாருடைய பார்வையும் படாத வகையில், அந்த சடலத்தை எடுத்துச் சென்று கசாரா காட் மலைப்பாதையின் பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

இருப்பினும், குற்றவாளிகள் எவ்வளவுதான் சாதுரியமாகத் திட்டமிட்டாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதற்கு ஏற்ப, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நாசிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தையும், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தையும் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் மாட்டிக்கொண்டனர். தற்போது இருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர், இந்தத் திட்டமிட்ட படுகொலைக்குப் பின்னால் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.