கேரள மாநிலம் மணப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி பரிதா என்ற பெண் தனது குழந்தையுடன் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் பரிதா மீது மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்டு பரிதா படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் தப்பியது. இதனையடுத்து படுகாயம் அடைந்த பரிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.