தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள தேவற்காத்ர மண்டலத்தின் பசவாய்பள்ளி கிராமத்தில் நள்ளிரவில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண், தனது சொந்தக் கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
மேலும் நள்ளிரவில் கணவன் “என்னை காப்பாற்றுங்கள்” என்று அலறிய சத்தம் கேட்டு ஒட்டுமொத்த கிராமமே அதிர்ச்சியிலும் பீதியிலும் உறைந்துபோனது. இந்த பயங்கரமான சம்பவம் அவர்களின் மகனின் கண் முன்னாலேயே நடந்துள்ளது.
இந்நிலையில் தன் தாயே தந்தையைக் கொடூரமாகக் கத்தியால் குத்துவதைக் கண்டு அந்தச் சிறுவன் அதிர்ச்சியடைந்தான். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
