தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா மற்றும் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த முன்னாடி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்ற பட்டியல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் நடிகர் அஜித் ஒரு திரைப்படத்திற்கு 90 கோடி சம்பளம் வாங்குவதாகவும், நடிகர் விஜய் 80 கோடி, ரஜினிகாந்த் 75 கோடி, கமல்ஹாசன் அறுபது கோடி, தனுஷ் 50 கோடி என சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. முதல் ஐந்து இடங்களில் நடிகர் சூர்யா இல்லாதது குறிப்பிடத்தக்கது.