லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிக்கும் படம் “தளபதி 67”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், இதில் நடிக்கவுள்ள கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், திரிஷா ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டி அமலா ஷாஜி டெல்லி விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதற்கிடையில் ரசிகர் ஒருவர் அமலா ஷாஜியும் இந்த திரைப்படத்தில் இருக்கிறாரோ என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அமலா ஷாஜி “இது நடந்துவிட்டது” என மட்டும் கமெண்ட் செய்து உள்ளார். அதனை தொடர்ந்து அமலா ஷாஜி ரசிகர்கள் இப்புகைப்படத்தை தளபதி 67 உடன் இணைத்து ட்ரெண் செய்து வருகின்றனர்.