தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கி அட்லூரி. இவர் தற்போது தமிழில் நடிகர் தனுஷை வைத்து வாத்தி என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இன்னிலையில் இயக்குனர் வெங்கி அட்லோரிக்கும் பூஜா என்பவருக்கும் கடந்த 1-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் தெலுங்கு நடிகர் நிதின் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கிளாமர் உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் பூஜா தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.