பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.

இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்க சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.

இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கிரீன் ஸ்டுடியோ சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இத்திரை படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடல் நாளை 12.5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கின்றது. சிம்பு இடம் பெற்றுள்ள அந்த வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றார்கள். இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியிருப்பதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.