நெல்லூர் இனத்தைச் சேர்ந்த பசு ஒன்று பிரேசில் நாட்டில் 40 கோடிக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோல் வகையை சேர்ந்த இந்த நெல்லூர் பசு ஆந்திராவை பூர்விகமாக கொண்டது. பால் வெள்ளை நிறத் தோலுடன் வித்தியாசமான திமிலையும் இந்த பசு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வியாட்டினா என்ற பெயர் கொண்ட நான்கு வயதுடைய நெல்லூர் பசுவை பிரேசிலை சேர்ந்த ஒருவர் 40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.