அமெரிக்காவின் டெக்சாஸ், கன்சாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் உள்ள பால் பண்ணை மாடுகளின் பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், இந்த வைரஸ் மக்களுக்கு மிக அருகில் வந்துவிட்டதோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

அந்த மாகாணங்களில் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு எச்5என்1 வகை-ஏ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.