2022 ஆம் ஆண்டில் உலக அளவில் 15 கோடி மெட்ரிக் டன் அதாவது 19 சதவீதம் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக ஐநா சபை சுற்றுச்சூழல் பிரிவு தெரிவித்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவது குறித்த அதன் அறிக்கையில், உலகம் முழுவதும் 78 கோடி பேர் நாள்பட்ட பட்டினியை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் 79 கிலோ உணவை வீணாக்குகின்றனர். உணவை வீணாக்குவதில் வீடுகள் 60% பங்கு வகிக்கின்றன என கூறப்பட்டுள்ளது.