அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் கால்களில் வீக்கம் மற்றும் சிறிய சிராய்ப்புகள் காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த பரிசோதனையின் முடிவில், அவருக்கு “நரம்பு நோய் ” (Chronic Venous Insufficiency) என்ற சாதாரண மற்றும் தீங்கற்ற நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

79 வயதான டிரம்ப், இதய சுகாதிக்காக அஸ்பிரின் மாத்திரையை தொடர்ச்சியாக எடுத்துவருகிறார் என்றும், இதயத்தின் செயல்பாடுகள் முறையாகவே இருப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். “அவரது இதயமும் சிறுநீரக செயல்பாடுகளும் சிறப்பாகவே உள்ளன. எந்தவொரு முக்கிய உடல்நலக் கோளாறுகளும் இல்லை” என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம், டிரம்ப் உடல்நிலையில் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்பதும், அவருக்கு சீரான மருத்துவ கவனிப்பு வழங்கப்பட்டுவருகிறது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.