பாஸ்டனில் அமைந்துள்ள ஜில்லெட் ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோல்ட்ப்ளே இசைக்குழுவின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு காட்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘
கிஸ் கேம்’ எனப்படும் ஜம்போட்ரான் திரையில், ஆஸ்ட்ரோனமர் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன் மற்றும் தலைமை மக்கள் அதிகாரி கிறிஸ்டின் கபோட் ஆகியோர் நெருக்கமாக நிற்பது வீடியோவில் படம் பிடிக்கப்பட்டது. அதில் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக்கொண்டு நெருக்கமாக நின்று, கேமரா தங்களை நோக்கி திரும்பியதும் சற்று அதிர்ச்சி அடைந்தபடி வேகமாக பிரிந்தனர்.
View this post on Instagram
“>
இந்த காட்சி மேடையில் பாடி கொண்டிருந்த கிறிஸ் மார்ட்டின் கவனத்தில் பட்டதும், அவர் நகைச்சுவையாக “இந்த இருவருக்குள் காதலா அல்லது கூச்சமா?” என கூறினார். இந்த சினேகிதமான விமர்சனம் நிகழ்ச்சியில் உள்ளோர் சிரித்து ரசித்தாலும், இது சமூக ஊடகங்களில் வெடிக்க வைத்தது.
இந்தக் காட்சி டிக்டாக், ரெடிட், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக பைரன் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்ததால், இந்த நிகழ்வு விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் இடமளித்தது. சிலர் “அவர்களை அம்பலப்படுத்தியதில் மகிழ்ச்சி” என கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் ஒரு பொது நிகழ்வில் பணியிட அதிகாரிகள் இவ்வாறு சேர்ந்து இருப்பது தவறானதா என கேள்வியெழுப்பினர்.
Podczas koncertu zespołu Coldplay, “Kiss Cam” nieoczekiwanie stało się narzędziem do ujawnienia rzekomego romansu.
Kamera pokazała Andy’ego Byrona, dyrektora generalnego firmy Astronomer, w objęciach Kristin Cabot, szefowej działu HR. pic.twitter.com/HzhO2nXxo4
— MNFPL (@musicnewsfactpl) July 17, 2025
“>
இந்த சம்பவம், தொழிலிடங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்கிடையிலான எல்லைகள் குறித்து பெரும் விவாதங்களை தூண்டியுள்ளது. குறிப்பாக நிறுவன தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் பணியியல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை சம்பந்தப்பட்ட நிறுவனமான ஆஸ்ட்ரோனமர் அல்லது அந்த நிர்வாகிகள் இதுபற்றி எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
