லண்டன்: பிரிட்டன் நாட்டில் வாக்குரிமை பெறும் குறைந்தபட்ச வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க அரசாங்கம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

தற்போதைய தொழிலாளர் கட்சி அரசு, 2024 ஜூலை மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்ற கெய்ர் ஸ்டாமரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்குமுன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இளையவர்களுக்கு அரசியல் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய நடவடிக்கையின் கீழ், 16 வயது பூர்த்தியடைந்தவுடன் அந்தந்த நபர்களின் பெயர்கள் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் வகையில் ஒரு வசதியையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. நாடு முழுவதும் 2029 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த புதிய விதி அமல்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் மூலம், இளம் தலைமுறையின் அரசியல் சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையில் எதிர்கால தேர்தல்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.