அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதான ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் கார்மென் ஆண்ட்ரேட் மற்றும் லூபிடா ஆண்ட்ரேட் ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள்.
இந்நிலையில், கடந்த 2024 அக்டோபரில் கார்மென், தனது நீண்டநாள் காதலர் டேனியல் மெக்கார்மேக்கை திருமணம் செய்துகொண்டார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிஞ்ச் (Hinge) எனும் டேட்டிங் செயலியில் இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த நிலையில், கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள நியூ மில்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ‘Lovers Leap Bridge’ என்ற இடத்தில், இருவரும் மோதிரங்களை பரிமாறிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.
View this post on Instagram
“>
திருமண தகவலை கார்மென் தனது YouTube வீடியோவின் இறுதியில் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். “நான் திருமணம் செய்து கொண்டேன்” என்று சொல்லிக்கொண்டே தனது மோதிரத்தையும் காண்பித்தார். பின்னர், மணமகனான டேனியல் வீடியோவில் இணைந்து, “எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது… இப்போது நான் கணவர்!” எனச் சிரித்தபடி கூறினார்.
இந்த திருமணம் மிகவும் நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் மேலும் குறிப்பிடத்தக்கது என்னவெனில், கார்மென் பாரம்பரிய வெள்ளை உடையை தவிர்த்து, மரகத நிற கவுன் அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டார். “வெள்ளை எனக்கு பிடிக்காது, அது எனக்கு பொருந்தாத நிறம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவரது இரட்டையர் லூபிடாவும், மணமகனான டேனியலும் கருப்பு நிற உடையில் பாரம்பரிய அழகாக காட்சியளித்தனர். அவர்களின் இந்த எளிமையான திருமணம் மற்றும் நேர்த்தியான அறிவிப்பு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
