புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான காரியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வீதிகளில் வசிக்கும் ஆதரவற்ற தம்பதி ஒருவருக்கு ‘நோவா’ (Noah) என்ற இந்திய வம்சாவளி இளைஞர் குடிநீரும் உணவும் வழங்கி உதவியுள்ளார். கடும் குளிரில் தண்ணீரின்றி தவித்த அந்தத் தம்பதியினரை கண்டதும் கண்ணீர் விட்டதாகக் குறிப்பிட்ட நோவா, மனிதாபிமானத்துடன் அவர்களுக்கு மெக்டொனால்ட்ஸ் உணவை வாங்கித் தந்துள்ளார்.

<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Noah (@flexnoahh)

“>
இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, “உண்மையான புத்தாண்டு கொண்டாட்டம் பிறர் முகத்தில் புன்னகையை வரவழைப்பதே” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தமக்கு கிடைத்த  உணவை பெற்றுக்கொண்ட அந்த அமெரிக்க முதியவர், “கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” (God bless you) என்று தழுதழுத்த குரலில் கூறியது இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

ஆடம்பரக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், சக மனிதனின் பசியைப் போக்கிய இந்த இந்திய இளைஞரின் செயல், “எந்த தேசத்தில் இருந்தாலும் இந்தியர்களின் மனிதாபிமானம் மாறாது” என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.