அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், சர்வதேச கடல் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ் நீரிணை’ பகுதியில் பதற்றம் இன்னும் குறையவில்லை.
போர் அச்சத்தால் ஈரான் இந்த நீரிணையை மூடியுள்ளதால் அமெரிக்கா பெரும் கவலையடைந்துள்ளது. இந்நிலையில், தனது ஏவுகணை இருப்பு முன்னெப்போதையும் விட 120 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், இஸ்ரேலுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி, வாஷிங்டன் போஸ்ட் இதழ் வெளியிட்ட செய்தியைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஈரானிடம் தற்போது 70 சதவீத ஏவுகணைகள் மட்டுமே மிச்சம் இருப்பதாக அந்த இதழ் குறிப்பிட்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அரக்சி, போர் தொடங்கியபோது இருந்ததை விட தற்போது 120 மடங்கு கூடுதல் ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பதாகவும், தங்களது பலம் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் தாங்கள் அமெரிக்காவிடம் அடிபணியப் போவதில்லை என்ற தெளிவான எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.
