பெல்ஜியம் நாட்டின் கென்ட் நகரில் உள்ள ஒரு விசித்திரமான மதுக்கூடம், பீர் பிரியர்கள் மத்தியில் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இங்கு பீர் அருந்த வருபவர்கள், தங்களது ஒரு காலணியைக் கழற்றி பார் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ‘குவாக்’ எனப்படும் ஒரு சிறப்பு வகை கண்ணாடிக் குவளையில் தான் இங்கு பீர் பரிமாறப்படுகிறது.

இந்த விலையுயர்ந்த மற்றும் தனித்துவமான குவளையை வாடிக்கையாளர்கள் திருடிச் செல்வதைத் தடுக்கவே பார் உரிமையாளர்கள் இந்த நூதன முறையைக் கையாளுகின்றனர். வாடிக்கையாளர் பீரைக் குடித்து முடித்துவிட்டு குவளையைத் திரும்பக் கொடுத்தால் மட்டுமே, அவர்களின் காலணி மீண்டும் ஒப்படைக்கப்படும்.

இந்திய வோல்கர் ஒருவர் இதுகுறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் காலணிகள் அனைத்தும் ஒரு கூடையில் போடப்பட்டு, பாரின் மேற்கூரையில் தொங்கவிடப்படுகின்றன.

முதலில் இது விசித்திரமாகத் தோன்றினாலும், சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு வேடிக்கையான அனுபவமாக மாறியுள்ளது. இந்தக் குவளைகள் கீழே விழுந்து உடையாமல் கவனமாகக் கையாள வேண்டியிருப்பதால், பீர் அருந்துவதே அங்கு ஒரு சவாலான விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Chahat Anand (@chahat_anand)

“>

பாரின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், அதே சமயம் வாடிக்கையாளர்களைக் கவரவும் உருவாக்கப் பட்ட இந்த ‘காலணி விதி’ உலகப்புகழ் பெற்றுள்ளது.