அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ‘சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஜுயெகின் ஜியாங் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை உலுக்கியுள்ளது. ஏற்கனவே இவர் கணித்தபடி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ஈரானுடன் போரைத் தொடங்கியதும் அப்படியே பலித்துள்ளது. இப்போது இவரது மூன்றாவது கணிப்புதான் அமெரிக்காவை அதிர வைத்துள்ளது; அதாவது, “இந்த மகா யுத்தத்தில் அமெரிக்கா ஈரானிடம் மோசமான தோல்வியைத் தழுவும்” என்பதுதான் அது.
ஏல் கல்லூரியில் பட்டம் பெற்ற வரலாற்றுப் பேராசிரியரான ஜியாங், ஈரானின் மலைப்பாங்கான நிலப்பரப்பு, நீண்ட தூர விநியோகச் சங்கிலி மற்றும் அமெரிக்காவிற்குள் இருக்கும் உள்நாட்டு எதிர்ப்பு ஆகியவையே அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் என விளக்கியுள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவு ஈரானுக்கு இருப்பதால், இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், இறுதியில் வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உலகமே இப்போது அந்த மூன்றாவது கணிப்பு நிஜமாகுமா எனப் பீதியில் காத்துக்கொண்டிருக்கிறது.
