அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளார். ஈரான் நாடு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி அமெரிக்காவிடம் ‘நிபந்தனையற்ற சரணாகதி’ அடைவதைத் தவிர, அந்த நாட்டுடன் வேறு எந்தவிதமான ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்று ட்ரம்ப் கறாராகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஈரான் சரணடைந்த பிறகு, அந்த நாட்டிற்கு ஒரு சிறந்த தலைவரைத் தேர்வு செய்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைக்கும் என்றும், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த நேரடியான மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.