மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில், குடியிருப்பு வளாகத்தின் லிஃப்ட்டில் உமிழ்ந்ததாக ஏற்பட்ட சிறு தகராறு, பயங்கர கத்திக்குத்து தாக்குதலாக மாறியுள்ளது. இங்குள்ள மோர்வாடி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே இந்த மோதல் வெடித்துள்ளது.
மேலும் லிஃப்ட்டில் உள்ள காலணி வைக்கும் ரேக் மீது எச்சில் துப்பியதாகத் தொடங்கிய இந்த வாக்குவாதம், இரு தரப்பிலும் கடுமையான மோதலாக உருவெடுத்தது. இந்த வாக்குவாதத்தின் போது, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது 17 வயதுடைய மைனர் மகன் ஆகியோர் திடீரென ஆத்திரமடைந்து, எதிர்வீட்டுத் தம்பதியினர் மீது கொடூரமான முறையில் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Breaking: In Pimpri-Chinchwad’s Morwadi area, Dispute over spitting on a shoe rack inside a society lift escalated into a brutal knife attack on a Man by a Minor guy
Minor was firstly attacked by the Neighbour’s family and then he retaliated with Knife
pic.twitter.com/XhQMj4E1pz— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 14, 2026
“>
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இந்த அதிர்ச்சிகரமான கத்திக்குத்து சம்பவத்தின் முழு காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சந்து துக்காராம் நகர் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கைது செய்துள்ளனர். மேலும், இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால், போலீசார் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
