நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் நிதியை ₹12,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண்மைத் துறை இணை அமைச்சர் ராம்நாத் தாக்கூர், இந்த நிதியை உயர்த்துவது குறித்து தற்போது எந்தப் பரிசீலனையும் இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். இதனால், விவசாயிகளுக்கு வழக்கம் போல ஆண்டுக்கு ₹6,000 (மூன்று தவணைகளாகத் தலா ₹2,000) மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 21-வது தவணைத் தொகை கடந்த 2025 நவம்பர் 19 அன்று விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 22-வது தவணைக்கான (₹2,000) எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இந்தத் தவணைத் தொகை வரும் 2026 பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது இ-கேஒய்சி (e-KYC) மற்றும் நில ஆவணங்களைச் சரிபார்த்து வைத்திருப்பது அவசியமாகும்.