தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று நடிகர் விஜய் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நான் நியாயம் கேட்டு போராட்டம் நடைபெறும் நிலையில் இந்த போராட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியதாவது, அஜித் குமார் மரணத்திற்கு நீங்கள் சாரி கேட்டது தவறு கிடையாது.

அதேபோன்று உங்கள் ஆட்சியில் மரணம் அடைந்த 24 லாக்கப் டெத் குடும்பத்தினரிடமும் சாரி கேட்டீர்களா. அவர்கள் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் முதல் அஜித் குமார் மரணம் வரை அனைத்து விஷயங்களிலும் நீதிமன்றம் தான் தலையிட்டு உங்கள் அரசை கேள்வி கேட்கிறது. அப்படி என்றால் உங்கள் அரசு எதற்காக நீங்கள் ஏன் முதலமைச்சராக இருக்க வேண்டும். தற்போது ஸ்டாலின் நடத்துவது சாரி கார் மாடல் சர்க்கார்.‌

நீங்கள் சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய போது கடும் எதிர்ப்பு தெரிவித்தீர்களா இப்போது அஜித்குமார் மரண வழக்கை‌சிபிஐ விசாரணைக்கு மாற்றியது ஏன்.

இந்த சம்பவத்தில் உயர்நீதி மன்றத்தின் தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. நீங்கள் உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் மக்களுடன் சேர்ந்து நாங்கள் சட்டம் ஒழுங்கை சரி செய்வோம். சாத்தான்குளம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது அவமானம் என்றால் இப்போது அஜித்குமார் மரண வழக்கை மாற்றியது ஏன்.

சிபிஐ என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கைப்பாவையாக உள்ளது. மேலும் மத்திய அரசுக்கு பின்னால் ஒளிந்து கொண்டுள்ள திமுக அரசு கண்டிப்பாக சட்டம் ஒழுங்கை சரி செய்தே ஆக வேண்டும் என விஜய் கூறினார்.