தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் நீதிபதி மாணவர்கள் முன்னிலையில் பேசியபோது கூறியதாவது, இன்றைய கால இளைஞர்கள் அவர்களது குடும்பத்தினரை வெளிநாட்டு பட்டப்படிப்புகளுக்காக ஆசைப்பட்டு கடனில் மூழ்கடிக்கிறார்கள்.

இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டம் பயில விரும்பும் மாணவர்கள் இந்தியாவிலேயே தரமான கல்வியை பெற முடியும். மேலும் வெளிநாட்டு பட்டங்கள் அதிகரிப்பது என்பது வெறும் கட்டுக்கதை.

ஒருவரின் திறமை மற்றும் கல்வி அவர்களின் பணி மூலம் மட்டுமே நிரூபிக்கப்படும். எனவே இன்றைய கால இளம் தலைமுறையினர்  வெளிநாட்டு பட்டங்களுக்காக குடும்பங்களை கடன் சுமையில் தள்ள வேண்டாம் என மாணவர்களை அறிவுறுத்தினார்.

மேலும் தற்காலத்தில் நீதித்துறையில் இருக்கும் சவால்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து விளக்கினார்.

இந்தியா தற்போதைய காலங்களில் எதிர்கொண்டு வரும் சட்ட சவால்களையும் வரும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழில் ஈடுபடுபவர்கள் அனைவரும் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் எச்சரித்தார்.