தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. “திமுக கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போடுவாங்களான்றதே பெரிய சந்தேகமா இருக்குன்னு எங்க மகளிரணி வீடு வீடாக வாக்கு சேகரிக்கச் செல்லும் போதே சொன்னாங்க, அதனால கொளத்தூர் தொகுதி முடிவுகளை நாங்க முன்பே கணித்துவிட்டோம்” என்று ஐயுஎம்எல் (IUML) தலைவர் காதர் மொய்தீன் போட்டு உடைத்துள்ள உண்மை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

ஏற்கனவே “இபிஎஸ் அல்லது திருமாவளவனை முதல்வராக்க திமுக முயன்றது” என காதர் மொய்தீன் விமர்சித்திருந்த நிலையில், தற்போது தவெக அரசுக்கு ஐயுஎம்எல் ஆதரவளித்து இருப்பது கூட்டணியின் விரிசலை அப்பட்டமாக்கியுள்ளது. இந்த அடுக்கடுக்கான மோதல்களுக்கு இடையே, திமுக கூட்டணியில் இருந்து ஐயுஎம்எல் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளதாகத் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

வரும் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ள அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு, திமுகவுக்கு டாட்டா காட்டப்படலாம் என்பதால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது!

“>