தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது! திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி, கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாக வெளியாகி இருக்கும் அதிரடித் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக்.

“எடப்பாடி பழனிசாமி அல்லது திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முயன்றது” என்று ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் சமீபத்தில் கூறிய கருத்து   திமுக தலைமைக்கு செம ஷாக் கொடுத்திருந்தார்.

இந்த மோதல் புகைச்சலுக்கு நடுவே, தற்போது தவெக அரசுக்கு ஐயுஎம்எல் ஆதரவளித்து இருப்பது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது! வரும் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ள ஐயுஎம்எல் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது கழன்றுகொள்வதா என்பது குறித்து இறுதி முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறார்களாம். இதனால் அறிவாலயம் செம அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது!

“>