கான்பூரில் ஒரு மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது, இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் அவரை அடித்து, உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. வீடியோவில், இன்ஸ்பெக்டர் மாணவரை முகத்தில் அறைந்து, வயிற்றில் உதைப்பதும், “வீடியோ எடுத்தால் உன்னை அடிப்பேன்” என்று மிரட்டுவதும் தெரிகிறது. மாணவர், “என்னை இழுத்தது தவறு” என்று கூறியபோது, காவலர் கோபமடைந்து தாக்கியுள்ளார். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டார்.
This is UP police sub-inspector Amit Tripathi, posted in Kanpur. His style of resolving a complaint – a slap to the face and kick to the complainant's abdomen. His fluency with abuses matches the department standards. pic.twitter.com/Lnjb2PdCn8
— Piyush Rai (@Benarasiyaa) October 6, 2025
இந்தச் சம்பவம், நரமவ் பகுதியைச் சேர்ந்த அக்ஷய் என்ற மாணவர், தனது நண்பருடன் கிட்வாய் நகரில் பைக்கில் சென்றபோது நடந்தது. காவலர் ஒருவர் பைக்கை நிறுத்தச் சொல்லியபோது, அவர் நிறுத்தாமல் செல்ல முயன்றார். இதனால், காவலர்கள் அவரைப் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இன்ஸ்பெக்டர் திரிபாதி, அக்ஷயை காலரைப் பிடித்து இழுக்க, அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது அடித்து, திட்டியுள்ளார். இந்த வீடியோ பரவியதால், கான்பூர் காவல் துறை விசாரணை தொடங்கி, இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
