இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி 358 முதல் 398 தொகுதிகளில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக இழக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதில் பாஜக கூட்டணி இரண்டு முதல் மூன்று தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதிமுக கூட்டணி 1 முதல் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 29 முதல் 35 தொகுதிகளில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.