தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல் மற்றும் தேர்வு அட்டவணை போன்ற பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி ஆங்கில மொழியை சரளமாக பேச சிறப்பு பயிற்சிகள், விளையாட்டு மற்றும் கலைத்திறன்களை ஊக்குவிக்க வகுப்புகள் என பல முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இந்த முறை முதலாம் வகுப்பில் இருந்து மாணவர்களை அதிகமாக சேர்க்கவும் மாணவர் சேர்க்கையை 4.5 லட்சமாக மாற்றுவதற்கும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளை அப்படியே அரசு பள்ளிகளில் சேர்ப்பதை முழுமூச்சாக கொண்டு பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருகின்றது.