தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அடுத்த வாரம் கட்சியின் தலைவர் விஜய் வீடியோ மூலம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் இரண்டே நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது. முன்னர் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் கொடி மற்றும் சின்னம் குறித்து விஜய் வெளியிடுவதாக திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.