பிரபல அரசியல் விமர்சகரும் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளருமான மாரிதாஸ் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் அதில் கூறியிருப்பதாவது,

முதல் 4,5 சுற்றுகள் தாண்டிய பின் தவெக பின்னடைவை நோக்கி செல்லும்… தேர்தல் நாள் அன்று எல்லா பக்கமும் தவெக விஜய் ஆதரவாளார்கள் காலையிலேயே சென்று வாக்குகளை செலுத்து முடித்தனர். எனவே முதல் 3 சுற்றுகள் அவர்கள் வாக்கு முன்னிலை தான் இருக்கும்.. தெளிவான முடிவு 4,5 சுற்றுகள் தாண்டவே தெரிய வரும்.. கொஞ்சம் பொறுமை.. அதுக்குள்ளாக தவெக எல்லா பக்கமும் இனிப்புகள் கொடுக்க தொடங்கிவிட்டனர்… முதல் தேர்தலில் 11மணி அளவில் விஜயகாந்த் அவர்கள் 80 தொகுதிகளில் நெருக்கி முன்னிலை சென்றார் பின் என்ன ஆனது என்பதை அறிவோம். பொறுமை..

மேலும் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கும் என்று தொண்டர்களும் ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில் மொத்தமாக வாக்கு எண்ணிக்கை வெளிவந்த பிறகு கொண்டாட்டங்களை தொடர்வது நல்லது என அவர் கூறியுள்ளார்.