தமிழக அரசியல் வரலாற்றில் மிகச்சரியான கணிப்புகளை வழங்குவதில் பெயர்பெற்ற ‘ஆக்சிஸ் மை இந்தியா’ (Axis My India) நிறுவனத்தின் எக்ஸிட் போல் கணிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அச்சுப்பிசகாமல் உண்மையாகி வருவதைக் கண்டு அரசியல் உலகமே வாயடைத்துப் போயுள்ளது.

பெரும்பாலான ஊடகங்களும், கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே முடிவுகள் அமையும் என்றும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிகபட்சமாக 25 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்றும் ஆரூடம் கூறின. ஆனால், தவெக 98 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றும் என்ற ஆக்சிஸ் மை இந்தியாவின் அதிரடி கணிப்பு இப்போது வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில் அப்படியே பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இடங்கள் குறித்த கணிப்பில் சிறு மாற்றங்கள் இருந்தாலும், விஜய்யின் விஸ்வரூபத்தை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்ததன் மூலம் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ மீண்டும் தனது நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது. இந்த அதிரடித் திருப்பத்தால் மற்ற ஊடகங்களின் கணிப்புகள் தவிடுபொடியாகி, தமிழக அரசியல் களம் புதிய திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.