தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சுமார் 105 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமின்றி, விஜய்யின் குடும்பத்தினரும் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருக்கும் வேளையில், விஜய்யின் தந்தை மற்றும் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் (SAC), இன்று காலை திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்று சிறப்புத் தரிசனம் செய்தார். கட்சியின் வெற்றிக்காக வேண்டிவிட்டு அவர் சென்னை திரும்பினார்.
JUST IN 🔔 : விஜய் அண்னன் வீட்டில் கொண்டாட்டம் தொடங்கியது ! 😍🔥@TVKPartyHQ | #WhistlePodu pic.twitter.com/T07mR5ZXsJ
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 4, 2026
SAC சென்னை திரும்பியபோது, அவரது வீட்டில் திரண்டிருந்த உறவினர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தனது வீட்டின் லிப்டில் இருந்து வெளியே வந்தவுடன், அங்கிருந்த உறவினர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து, கைகளைத் தட்டி அவரை வரவேற்றனர்.
இந்தக் கொண்டாட்டக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதை அவரது குடும்பத்தினர் கொண்டாடும் விதம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
