தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் காலை முதலே இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அதே நேரத்தில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 104 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் இருக்கிறது. அதன் பிறகு அதிமுக 68 இடங்களிலும் திமுக 62 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட முன்னிலை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் அளித்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைவார் என்றும் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தோற்கும் என்றும் தேர்தலுக்குப் பிறகு அவர்களுடைய பில்டப் எல்லாம் புஷ்பானம் ஆகிவிடும் என்று கூறினார். மேலும் இந்த கிளிப்பை நீங்கள் தனியாக கட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் இருப்பதால் அந்த வீடியோவை தமிழக வெற்றிக்கழகத்தினர் பகிர்ந்து சாட்டை துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
— John Mahendran (@Johnroshan) May 4, 2026
