இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் அளவில் மருத்துவம் பெறும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படி எந்த ஒரு மாநிலத்திலும் மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படவில்லை. எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

அதே சமயம் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் 1500 மருத்துவமனைகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.