செயற்கை நுண்ணறிவு குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “இது செயற்கை நுண்ணறிவின் யுகம். செயற்கை நுண்ணறிவால் கல்வித்துறையில் ஒரு பெரும் மாற்றம் வரலாம். மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு ஒரு வரமாக அமையும். அதே நேரத்தில் சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் என்னென்ன தாக்கத்தை இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தப்போகிறது என்ற அச்சமும் எழுந்துள்ளது” என்றார்.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமேAI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. ஏன் ஒருவருக்கு எப்போது மரணம் வரும் என்பதை AI மூலம் கண்டறிய முடியும்.