தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கினறு பகுதியில் பூல் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு மும்பையில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அங்கு துணிகளை அயன் செய்யும் தொழிலில் ஈடுபட்டபடி யாசகம் பெற்று வந்துள்ளார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மூன்று குழந்தைகளையும் கரை சேர்த்த பூல் பாண்டியன் முழு நேர யாசகராக மாறியுள்ளார்.

மேலும் தான் பெற்ற யாசக பணத்தை கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழருக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொடுப்பது என பல்வேறு நிவாரண நிதிகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தான் யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாயை வழங்குவதற்காக நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இவரது இந்த செயல் பொதுமக்களிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது இருந்தது.