மலேசியாவில் உள்ள ‘பேட் கிரில்’ உணவக ஊழியர்கள், பெண் வாடிக்கையாளர் ஒருவரின் பானத்தில் மர்ம நபர் மயக்க மருந்து கலப்பதைத் தடுத்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர். அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பர், அவர் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு திரவத்தை பானத்தில் கலப்பதை ஊழியர் ஒருவர் கவனித்துள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட ஊழியர்கள், அந்தப் பானத்தை மாற்றிவிட்டு புதிய பானத்தைக் கொடுத்துள்ளனர். பின்னர் அந்தப் பெண் தனியாக இருந்தபோது அவரிடம் உண்மையை ரகசியமாகக் கூறி எச்சரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அந்த நபரைத் தனக்கு சில நாட்களாகத்தான் தெரியும் என்றும் அவர் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
<a href=”http://
في ماليزيا، تعرف رجل على فتاه قبل ايام قليله وذهب بها الى مطعم
اثنا تحضير المشروب ذهب الرجل للكاونتر كأنه يتفحص المشروب واخذه ووضع فيه سائل غريب واعاده، لاحظت الموظفات هذا الشي وبهدوء تام قاموا بتبديل مشروبها بواحد جديد. انتظروا الفرصه المناسبه واخذوا البنت للحمام وقالوا لها كل… pic.twitter.com/cCRTyS11kk
— Saif (@diol2n) May 2, 2026
“>
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒரு அசம்பாவிதத்தைத் தடுத்த உணவக ஊழியர்களின் சமயோசித புத்தியை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
அதே சமயம் பெண்கள் வெளியில் செல்லும்போது அறிமுகமில்லாதவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
