தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி(29) இவர் சினிமா உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாகர்கோவில்- பெங்களூரு விரைவு ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது 8 மாத கை குழந்தையுடன் ரயிலில் எறிய ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கி வரும் வரை குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும் படி வீரமணியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நபர் வருவதற்குள் ரயில் புறப்பட்டு சென்றதால் வீரமணி குழந்தை குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் ரயில்வே போலீசாரிடம் விஷயத்தை கூறி குழந்தையை ஒப்படைத்துவிட்டு வீரமணி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர் ரயில்வே போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, பயணியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதுவரை குழந்தை காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும்.
