திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த கார் ஓட்டுநர் பொதுமக்களால் பிடிபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, அங்கு வாடகை கார் ஓட்டுநராக வந்த மாரிசெல்வன் என்பவரால் குறிவைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த நபர் சிறுமியிடம் பேசி, தனியாக அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி மது ஊற்றிக் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். மதுபோதையில் சுயநினைவின்றி கீரைக்கடை பகுதியில் கிடந்த சிறுமியை மீட்ட பொதுமக்கள், உடனடியாக மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், மாரிசெல்வனைப் பிடித்து கடுமையாகத் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட மாரிசெல்வன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
