பாட்னா மெட்ரோ ரயில் கடந்த 6 ஆம் தேதி முதல்வர் நிதிஷ் குமார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ரயில் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் மெட்ரோ நிலையத்தின் படிக்கட்டுகள், கைப்பிடிகள், தளங்கள் மற்றும் தண்டவாளங்கள் கூட பான்-மசாலா (குட்கா) கறைகளால் அழுக்காகியுள்ளது காட்டப்படுகிறது.
पटना मेट्रो के शुरू हुए 4, 5 दिन ही हुए लेकिन गुटका गैंग सक्रिय हो गए है इसको रंगीन बनाने के लिए। सरकार को इसपर ध्यान देना चाहिए। pic.twitter.com/D2npWQy7J3
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) October 9, 2025
இதை பார்த்த நெட்டிசன்கள் இத்தகைய செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் காணொளியை விமர்சித்து, “மெட்ரோ தொடங்கி 2-3 நாட்கள் கூட ஆகவில்லை, ஆனால் குட்கா கறைகளால் நிலையம் அழுக்காகிவிட்டது. அரசு இவ்வளவு நல்ல வேலை செய்கிறது, ஆனால் மக்கள் அதை அழுக்காக்குகிறார்கள்” என்று கோபமாகப் பதிவிட்டுள்ளார்.
