அதிமுகவில் இணையத் தயார் என ஓபிஎஸ் கைகொடுக்க முன்வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு மிகக் கடுமையான ‘நோ’ சொல்லியுள்ளது. “டிடிவி தினகரனுடன் இணையத் தயார், ஆனால் ஓபிஎஸ்-ஐ மட்டும் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளவே முடியாது” என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இபிஎஸ்-ஸின் இந்த அதிரடிப் பேச்சு ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பலரும் இந்த முடிவை ஓபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலத்திற்கு விடப்பட்ட சவாலாகவே பார்த்தனர்.
இந்நிலையில், இன்று தேனி பெரியகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ்-ஸிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. எடப்பாடியின் அந்த ‘அதிர்ச்சி’ பதிலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ஓபிஎஸ் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், “இபிஎஸ் கூறியது பழைய செய்தி” என ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். எடப்பாடியின் முடிவை மிகச் சாதாரணமாகக் கடந்து சென்ற ஓபிஎஸ்-ஸின் இந்தப் போக்கு, அவர் ஏதோ ஒரு ரகசிய ‘மாஸ்டர் பிளான்’ வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது. 2026 தேர்தலுக்கு முன்னாடி அதிமுகவோட இந்த “கதவு மூடல்” விவகாரம் இன்னும் என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்தப் போகுதோ
