மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில், பழங்கள் வாடாமல் இருப்பதற்காக அவற்றின் மீது சாக்கடை நீரைத் தெளித்ததாக ஒரு பழ வியாபாரியைப் பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், தேங்கி நிற்கும் அசுத்தமான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துப் பழங்கள் மீது தெளிப்பதை வியாபாரி ஒப்புக்கொண்டதுடன், அது மாநகராட்சி வழங்கிய நல்ல நீர்தான் என நிரூபிக்க அந்தச் சாக்கடை நீரைக் குடித்துக் காட்டிய அதிர்ச்சி காட்சியும் பதிவாகியுள்ளது.

பொதுமக்கள் எச்சரித்த பின்னரும், அது பாதுகாப்பான நீர்தான் என அந்த வியாபாரி வாதிட்டுள்ளார். பின்னர் நிலைமை மோசமாவதை உணர்ந்து, தவற்றினை மன்னிக்குமாறு அழுது புலம்பிப் பொதுமக்களிடம் கெஞ்சியுள்ளார்.

“>

 

இருப்பினும், மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதை ஏற்க முடியாது எனக்கூறி அந்தப் பகுதி மக்கள் அவரைப் போலீசில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.