தமிழகத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். இந்த சூழலில் சென்னையில் சில ரவுடிகள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்ல முயன்ற போது வாகனத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரவுடிகள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#JUSTIN #Chennai #Rowdy #Police #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/pYpp92cfrL
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 1, 2025
