மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், கல்வியாளருமாக இருந்தவர் வசந்தி தேவி (87). இவர் இன்று வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது மக்கள் நல கூட்டணியின் சார்பாக ஆர்கே நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார்.
- மேலும் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
