மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் திரைப் படத்தையே மிஞ்சும் வகையிலான ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள குடும்ப நீதிமன்றத்தில் 23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த தம்பதியினர் விவாகரத்து கோரி அணுகினர்.

மேலும் 42 வயதான கணவர், தனது அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்ததே இந்த விரிசலுக்குக் காரணமாக அமைந்தது. தங்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், கணவரின் பிடிவாதமான போக்கைக் கண்ட மனைவி, தனது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

அதன்படி, தனது கணவரை அந்தப் பெண்ணுக்கு விட்டுக்கொடுக்க சம்மதித்த மனைவி, அதற்குப் பதிலாக 1.5 கோடி ரூபாய் இழப்பீடாகக் கோரினார். இந்தப் பேரம் நீதிமன்ற சமரசத்தின் ஒரு பகுதியாகப் பேசப்பட்டு, இறுதியில் அந்தப் பெண்ணும் இதற்குச் சம்மதித்தார்.

இதற்காக அவர் தனது 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீட்டையும், எஞ்சிய 25 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் வழங்க ஒப்புக்கொண்டார். பணத்தைப் பெற்றுக்கொண்டு கணவரைப் பிரிந்த மனைவி, இனி தனது மகள்களின் படிப்பு மற்றும் எதிர்காலச் செலவுகளுக்குத் தட்டுப்பாடு இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.